உணவு பாதுகாப்பும் ஊட்டச்சத்து உறுதிப்படுத்தலும்

உணவு பாதுகாப்பும் ஊட்டச்சத்து உறுதிப்படுத்தலும் என்பது ஒவ்வொருவருக்கும் எந்நேரமும் போதுமான, பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பெறக்கூடிய சூழலை உருவாக்குவதாகும். இதற்காக உணவு உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விநியோகம் சுகாதார தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும்.

சமநிலையான உணவுப் பழக்கம் உடல் வளர்ச்சி, சக்தி மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் உகந்த ஊட்டச்சத்தைக் பெறுவது மிக அவசியமானதாகும்.

இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு, நோய்கள் மற்றும் சமூக-பொருளாதார சிக்கல்கள் குறைக்கப்பட்டு, மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை உறுதி செய்யப்படுவது எங்களின் பொறுப்பாகும்.

  • ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களை வளர்க்க மக்களை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் விதை வழங்கல்.
  • உணவு பாதுகாப்பின் மூலம் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தல்.
  • சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவித்து பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல்.